விளக்குமாறு பிய்ய பிய்ய ஆட்டோ ஓட்டுநரை ரவுண்ட் கட்டி தாக்கிய பெண்.. நடந்தது என்ன?

Published : Apr 20, 2022, 03:24 PM IST
விளக்குமாறு பிய்ய பிய்ய ஆட்டோ ஓட்டுநரை ரவுண்ட் கட்டி தாக்கிய பெண்.. நடந்தது என்ன?

சுருக்கம்

ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவர் ஆபாசமாக பேசியதோடு தனிமையை சாதகமாக்கிக் கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆட்டோவை விட்டு இறங்கிய அந்தப்பெண் ஆட்டோ ஓட்டுநரின் அத்துமீறல் குறித்து கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை அருகே தனியாக ஆட்டோவில் சென்ற போது ஆபாசமாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் விளக்குமாற்றால் அடித்து வெளுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கன்வாடி ஊழியர்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அமைந்து உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அங்கன்வாடி மையம் உள்ள பகுதிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கண்ணகி கண்ணன் என்பவரது ஆட்டோவில் ஏறி அங்கன்வாடி மையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். இந்த ஆட்டோவில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். 

ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்

அப்பொது, ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவர் ஆபாசமாக பேசியதோடு தனிமையை சாதகமாக்கிக் கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆட்டோவை விட்டு இறங்கிய அந்தப்பெண் ஆட்டோ ஓட்டுநரின் அத்துமீறல் குறித்து கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

விளக்குமாற்றால் அடி

இதனையடுத்து, கண்ணகியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்குமாறுகளுடன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்ற கணவன் தனது மனைவி கையில் விளக்குமாற்றை கொடுத்தார். கண்ணகி தான் வைத்திருந்த துடைப்பத்தால், ஆட்டோ டிரைவர் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம், இதேபோல் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு ஒருபோதும் யாரும் சப்போர்ட் பண்ணாதீர்கள் எனக்கூறியபடி, கண்ணனை துடைப்பத்தால் மேலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!