பயங்கர ஆயுதங்களுடன் இளைஞரை ஓட ஓட விரட்டிய கும்பல்... ஆத்திரம் தீர துடிதுடிக்க வெட்டிப் படுகொலை..!

Published : Jan 20, 2020, 11:07 AM ISTUpdated : Jan 20, 2020, 11:08 AM IST
பயங்கர ஆயுதங்களுடன் இளைஞரை ஓட ஓட விரட்டிய கும்பல்... ஆத்திரம் தீர துடிதுடிக்க வெட்டிப் படுகொலை..!

சுருக்கம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் மணிகண்டன் (26). இவர் இசை குழுவில் டிரம்ப் வாசித்து வந்தார். இவருக்கும் இவரது அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நாகை அருகே இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் மணிகண்டன் (26). இவர் இசை குழுவில் டிரம்ப் வாசித்து வந்தார். இவருக்கும் இவரது அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை திருவிழாவின் மணிகண்டன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர், பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். பேருந்தில் இறங்கியதுமே 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர். உயிர் பயத்தில் ஓடிய மணிகண்டனை விடாமல் துரதுரத்தி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று கதற கதற பலாத்காரம்...? வெறி தீராததால் பெண் உறுப்பை ஆசிட் ஊற்றி சிதைத்து எரிந்து கொலை..!

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!