
ஈரோட்டில் இளம்பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இளம்பெண்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத 26 வயது இளம்பெண் ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அவர் போட்டி தேர்வுக்காக படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் குளியலறையில் அவர் குளித்து கொண்டு இருந்தார். அப்போது குளியலறையின் மேல் கண்ணாடி ஜன்னல் துவாரத்தில் செல்போன் லைட் எரிந்து கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
குளிப்பதை வீடியோ
அப்போது தனது வீட்டிற்கு எதிரில் மொட்டை மாடியில் வசித்து வரும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் ( 29) அந்த பெண் வசித்து வரும் மொட்டை மாடியில் குதித்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டுக்குள் ஒடினார். அப்போது கண்ணன் இளம்பெண் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தான் கையில் வைத்திருந்த செல்போனை காண்பித்து இதில் நீ குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோவாக படம் எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டல்
மேலும் அவர் அந்த இளம்பெண்ணிடம் நான் கூப்பிடும்போதெல்லாம் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து, பக்கம் அக்கத்தினர் ஓடி வந்து கண்ணனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.