நானும் போலீஸ்தான்.. மரியாதையா மாமூல் கொடுங்க..வேஷம் போட்டவர்களை வெளுத்து வாங்கிய காவல்துறையினர்

Published : Mar 25, 2022, 06:39 AM IST
நானும் போலீஸ்தான்.. மரியாதையா மாமூல் கொடுங்க..வேஷம் போட்டவர்களை வெளுத்து வாங்கிய காவல்துறையினர்

சுருக்கம்

போலீஸ் எனக்கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நாங்களும் போலீஸ் தான் :

ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சி சரக்கப்பிள்ளையூர் பகுதியில் உள்ள கடைகளில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி 2 பேர் மாமூல் வசூலித்து வந்துள்ளனர். நேற்று காலையிலும் அந்த 2 பேரும், கடைகளில் மாமூல் வசூலிக்க சென்றுள்ளனர். அப்போது வடிவேல் (வயது 54) என்பவர், போலீஸ் அதிகாரிகள் எனக்கூறிய நபர்களிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வடிவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். 

பொளந்து கட்டிய போலீசார் :

இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சின்னப்பம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த குமார் (47). சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி (60) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் போலீசார் போன்று டிப்-டாப்பாக ஆடை அணிந்து இருந்தனர். மேலும் போலீசாரை போன்று தங்களது முடியை திருத்தி இருந்தனர். 

2 பேரையும் பார்க்கும் போது போலீஸ் அதிகாரிகள் போன்று காட்சி அளித்தனர். இதில் மணி, எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்தில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், வேறு எங்காவது இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மாமூல் வசூல் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி