சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்துள்ளார்.
இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர்.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி.. கதவை பூட்டி காவலுக்கு நின்ற 2வது மனைவி.!
இது தொடர்பாக அந்த கர்ப்பிணி கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே வீட்டில் பெற்றோருடன் வாடகைக்கு குடியிருந்து வரும் ஸ்ரீராம்(22) என்பதும் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த பெண்கள், குளியல் அறையில் குளிக்கும் போது, யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து அந்த வீடியோவை இரவு நேரங்களில் தனியாக ரசித்து பார்த்து வந்தது தெரியவந்தது. ஸ்ரீராம் செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்த போது அதில், பல பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, செல்போனில் இருந்த வீடியோக்களை போலீசார் அழித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்.. குழந்தையின் உயிருக்கு ஏமனாக மாறிய கொடூர தாய்.. விசாரணையில் பகீர்.!