ஓடிப்போன பெண் கொலை.! 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞர்.! திடீரென உயிருடன் வந்த பெண் - போலீஸ் அதிர்ச்சி

Published : Dec 07, 2022, 04:31 PM IST
ஓடிப்போன பெண் கொலை.! 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞர்.!  திடீரென உயிருடன் வந்த பெண் - போலீஸ் அதிர்ச்சி

சுருக்கம்

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக அறிவிக்கப்பட்ட உத்தரபிரதேச பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மிரர் நவ் செய்தியின்படி, உத்தரபிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறை கூறியது. பின்னர், தம்பதியினர் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு மாறினர் என்று கூறப்படுகிறது. பெண்ணைக் கடத்திச் சென்று கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விஷ்ணு என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க..மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!

இதற்கிடையில், அந்த விஷ்ணுவின் தாயார் தனக்கு நீதி கோரி நீதிமன்றத்தை அணுகினார்.  போலீசார் அந்த பெண்ணை அலிகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரது அடையாளத்தை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய முயன்றனர். அந்தப் பெண்ணின் தந்தை அவளை தனது மகள் என்று அடையாளம் காட்டினார்.  7 ஆண்டுகளுக்கு முன்பு முழு சம்பவம் நடந்தபோது, ​​ஆக்ராவில் அடையாளம் தெரியாத ஒரு சடலத்தை அவர் தனது மகள் என்று அடையாளம் கண்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!

விஷ்ணுவின் தாயார் முன்னதாக அலிகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலாநிதி நைதானியை அணுகி, 'இறந்த' பெண் குழந்தைகளுடன் உயிருடன் இருப்பதாகவும், திருமணமாகி இருப்பதாகவும் தனக்குத் தகவல் இருப்பதாகக் கூறினார்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நைதானி உத்தரவிட்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. செய்யாத குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!