பாபர் மசூதி விவகாரம்.! சர்ச்சை கருத்து பதிவிட்ட அர்ஜூன் சம்பத்.! பதில் கொடுத்த தடா ரஹீம்.!வழக்கு பதிந்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Dec 7, 2022, 11:10 AM IST
Highlights

ரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜுன் சம்பத் மீதும்  அதற்கு பதில் அளித்து பதிவிட்ட தடா ரஹீம்  மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாபர் மசூதி- சர்ச்சை கருத்து

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற மதக்கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனவே ஆண்டு தோறும் டிசம்பர் 6ஆம் தேதி கருப்பு தினமாக இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்து மக்களை கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் பாபர் மசூதி தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாபர் மசூதி இடிப்பு தினம்..! வாகன சோதனையில் போலீசார்.. பதற்றமான இடங்களில் தீவிர கண்காணிப்பு

 வழக்கு பதிந்த போலீஸ்

அதற்கு பதில் அளிக்கும் விதமாக தடா ரஹீம் என்பவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்துள்ளார். இதை கவனித்த கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அர்ஜூன்சம்பத் மற்றும் தடா ரஹீம் ஆகிய இருவர் மீதும்  தனித்தனியாக இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அர்ஜூன்சம்பத், தடாரஹீம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
 

click me!