பாபர் மசூதி இடிப்பு தினம்..! வாகன சோதனையில் போலீசார்.. பதற்றமான இடங்களில் தீவிர கண்காணிப்பு

By Ajmal KhanFirst Published Dec 6, 2022, 12:12 PM IST
Highlights

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற மதக்கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனவே ஆண்டு தோறும் டிசம்பர் 6ஆம் தேதி கருப்பு தினமாக இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதவகையில் தடுக்க 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

பாதுகாப்பு பணியில் போலீசார்

இந்தநிலையில் கோவையில் ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை முழுவதும் 1476 பேலீசார் வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களால் மோப்ப நாய் உதவியுடன் தண்டவாளம் மற்றும் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை நடைபெற்று வருகிறது. பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதும் வெளியே அனுப்பப்படுவதும் என நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. உக்கடம் ,டவுன்ஹால்  ஆத்துப்பாலம் போன்ற கோவையின் பிரதான பகுதிகளிலும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனார்.

இதையும் படியுங்கள்

பாஜக ஏஜெண்டாக, எடுபுடியாக செயல்படும் ஆளுநர்..! ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- வைகோ ஆவேசம்

 

click me!