மூதாட்டியிடம் செயின் பறித்த வட மாநில கொள்ளையர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீஸ்!!

Published : Dec 05, 2022, 11:30 PM IST
மூதாட்டியிடம் செயின் பறித்த வட மாநில கொள்ளையர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீஸ்!!

சுருக்கம்

கோவை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாயப்பனூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மேரி. 75 வயது மூதாட்டியான இவர், இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இவரை பின் தொடர்ந்து வந்த வட மாநில இளைஞர்கள் இருவர் மூதாட்டி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கலியை பறித்து கொண்டு தப்பியோடினர்.

இதையும் படிங்க: போலீசில் போட்டுக் கொடுத்த வரை போட்டுத் தள்ளிய பயங்கரம்.. விசாரணையில் பகீர் தகவல்..!

இதுக்குறித்து மூதாட்டி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் இருவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டிருந்தது பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பசங்க எல்லாம் பெருசா ஆயிட்டாங்க! கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரம்! கள்ளக்காதலி, மகளை துடிக்க வைத்த கொடூரம்

அதில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சருல்சேக் மற்றும் மணிருல்சேக் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!