போலீசில் போட்டுக் கொடுத்த வரை போட்டுத் தள்ளிய பயங்கரம்.. விசாரணையில் பகீர் தகவல்..!

சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவர் பெரியமேடு அல்லிக்குளம் பஜாரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

Iron merchant murder case.. 5 people arrested

கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததால் இரும்பு வியாபாரி ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவர் பெரியமேடு அல்லிக்குளம் பஜாரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். முனுசாமி மற்றும் அவரது மாமியார் கடைகள் முன்பு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாசர்பாடி எம்ஆர்.நகரை சேர்ந்த ரவுடி மணிகண்டன்(எ) புளிமூட்டை மணி(27) என்பவர் செல்போன் கடை போட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

Latest Videos

இதையும் படிங்க;- இளைஞர் வெட்டி படுகொலை.. வெறி தீராததால் தலையை மட்டும் தனியாக எடுத்து சென்ற கொடூர கும்பல்.. சிவங்கையில் பயங்கரம்

இதனிடையே, மணிகண்டன் திருட்டு செல்போன்களை வாங்கி விற்று வந்ததாக முனுசாமி பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது கூட்டாளிகளான கொடுங்கையூர் அஷ்ரப் அலி(28), புளியந்தோப்பு கே.பார்க் அப்பாஸ்(28), அப்பி(எ) ஆப்பிரகாம்(20), கிஷோர்(27) ஆகியோருடன் சேர்ந்து இரும்பு வியாபாரி முனுசாமியை சுத்துபோட்டனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த முனுசாமியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். இதனையடுத்துது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இரும்பு வியாபாரியை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற ரவுடி மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க;-  வேலைக்காரியுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்..!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image