ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பகுடு பாஸ்கரன்(33). கஞ்சா வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்ததால் 2வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் தாய், மகளை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பகுடு பாஸ்கரன்(33). கஞ்சா வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்ததால் 2வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது பெண் கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இதையும் படிங்க;- கேட்கும்போதே தலை சுற்றுகிறது.. பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த அபிநயா கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
இந்நிலையில், கணவர் இல்லாமல் வாழ்ந்து வந்த இந்த பெண் மீது பகுடு பாஸ்கருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்துள்ளது. அடிக்கடி அந்த பெண்ணிடம் அவர் பேச்சு கொடுத்தாலும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, பாஸ்கரின் 2வது மனைவி துர்காவுக்கும் அந்த பெண்ணுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளே நுழைந்துள்ளார். வெளிப்புறம் கதவை பூட்டிக்கொண்டு துர்கா காவலுக்கு நின்றார். பின்னர், தாய் மற்றும் மகளை அடுத்தடுத்து கஞ்சா வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோகாவும் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை காண்பித்து மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பகுடு பாஸ்கர், மற்றும் அவரது 2 மனைவி துர்காவை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்.. குழந்தையின் உயிருக்கு ஏமனாக மாறிய கொடூர தாய்.. விசாரணையில் பகீர்.!