முதலமைச்சர் செல்லும் பாதையில் வாகன தணிக்கை..! வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ் ஐ ?அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Dec 4, 2022, 1:56 PM IST
Highlights

கோவையில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலி எஸ்ஐயை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வாகன தணிக்கையில் போலி போலீஸ்

போலீஸ் போல் உடை அணிந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்  திருப்பூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நேற்று சென்ற போது நடைபெற்றது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீஸ் எஸ்ஐ உடையணிந்த நபர்  வாகனங்களை தடுத்து நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை மடக்கி விசாரித்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டி ஒருவர் இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

கேட்கும்போதே தலை சுற்றுகிறது.. பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த அபிநயா கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

பொதுமக்களிடம் பண வசூல்

இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த போலீசார்  புல்லட்டில் போலீஸ் எஸ்ஐ உடையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் செல்வம் என்பதும், கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் போலீஸ் உடையில்  வாகனத் தணிக்கை செய்து பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.

லிவிங் டூகெதரில் இருந்தவர்களுக்கு இடையே தகராறு… கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிரடியாக கைது செய்த போலீஸ்

போலீஸ் எஸ்ஐ உடையில் புல்லட்டில் கெத்தாக வலம் வருவதுடன், அவ்வப்போது வாகனத் தணிக்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தி வந்ததுள்ளார். மேலும் எஸ்ஐ எனக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்,  போலியாக வாகன தணிக்கைக்கு பயன்படுத்திய  புல்லட்டையும், காவல் துறையினரின் உடையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

 

click me!