பிரசவத்திற்கு சென்ற மனைவி.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மச்சினிச்சியை மடக்கி பலாத்காரம்..!

Published : May 26, 2021, 06:59 PM ISTUpdated : May 26, 2021, 07:06 PM IST
பிரசவத்திற்கு சென்ற மனைவி.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மச்சினிச்சியை மடக்கி பலாத்காரம்..!

சுருக்கம்

சென்னையில் ஆவடியில்  மனைவி பிரசவத்திற்காக சென்ற நேரத்தில் மைத்துனியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆவடியில்  மனைவி பிரசவத்திற்காக சென்ற நேரத்தில் மைத்துனியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பூத்தேரி பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் (26) என்பவர் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். மாமியார் மற்றும் மைத்துனர்கள், மைத்துனி ஆகியோரும் தங்கி இருந்து பணியாற்றி வந்தனர். கடந்த மார்ச் மாதம் அஜித்தின் மனைவி பிரசவத்திற்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அருகில் இருந்து கவனிக்க மருத்துவமனைக்கு மாமியார் மற்றும் குடும்பத்தினர் சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் அஜித் மற்றும் 16 வயது மைத்துனி தனியாக இருந்துள்ளனர்.

 இதை சரியாக பயன்படுத்தி ஆசைவார்த்தை கூறி மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி அனைவரும் சொந்த ஊருக்கு சென்ற போதும் மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால்,  உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இதுதொடர்பாக மருத்துவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!