பெருமையோடு சேர்த்துவிட்ட பெற்றோருக்கு சிறுமை தேடித் தந்த பிஎஸ்பிபி... மாணவிகளிடம் தியேட்டரிலும் சில்மிஷம்..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2021, 6:17 PM IST
Highlights

மொத்தத்தில் இந்த பள்ளியில் படித்தால் கெளரவம் என எதிர்பார்த்து சேர்த்துவிட்ட பெற்றோர்களுக்கு இந்த பள்ளியால் அவமானமே மிஞ்சியுள்ளது. 

பத்மசேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வரும் புகார்களை தனித் தனி வழக்குகளாக பதிவு செய்து வருகின்றனர் காவல்துறையினர். ராஜகோபாலன் லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ராஜகோபாலனை போலீசார் 5 நாள் காவலில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ’’ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது பிடிக்காத மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதை ஆசிரியர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் அதிகமாக மாணவிகளை மிரட்டி தன்வசப்படுத்தியுள்ளார்.

மாணவிகளின் செல்போன் எண்களை அவர்களிடமே வாங்கி இரவு நேரங்களில் ஆபாச மெசேஜ் செய்து ஆபாச படங்களை பெற்று ரசித்து வந்துள்ளார். அப்படி பெறப்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை ஆசிரியர் தனது செல்போனில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். பெற்றோருக்கு தெரியாமல் சில மாணவிகளை ஆசிரியர் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் அவர் வைத்திருந்தார். அதே பள்ளியில் பணியாற்றி வரும் 3 ஆசிரியர்களுக்கு மாணவிகளின் ஆபாச படங்களை பகிர்ந்து சேர்ந்து ரசித்துள்ளார்.

ராஜகோபாலன் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை ஆய்வு செய்த போது, லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளை மிரட்டி ஆபாச படங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்ததும் தெரிந்தது. பெரும்பாலான மாணவிகள் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் மகள்கள்’’ எனக் கூறுகின்றனர். இன்னும் என்னென்ன விவகாரங்கள் ராஜகோபாலன் விஷயத்தில் வெளிவர இருக்கிறதோ என அதிர்ச்சியாகி கிடக்கின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பள்ளியில் படித்தால் கெளரவம் என எதிர்பார்த்து சேர்த்துவிட்ட பெற்றோர்களுக்கு இந்த பள்ளியால் அவமானமே மிஞ்சியுள்ளது. 

click me!