பள்ளிக்கூடத்தில் எனக்கும் அந்தக் கொடுமை நடந்திருக்கிறது... வெதும்பி வெடித்த 96 பட நடிகை..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2021, 11:54 AM IST
Highlights

எங்களை கஷ்டப்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை சொல்ல நான் விரும்பவில்லை. பள்ளி சூழல் மிகவும் மோசமாக இருந்தது. என்னை போன்று கஷ்டப்பட்ட அனைவருக்காகவும் வருத்தப்படுகிறேன். 

சென்னை கே.கே. நகரில் இருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் பிரச்சனையாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும், மக்களும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் 96 படத்தில் ஜானுவாக நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன், ‘’குழந்தை பருவத்தில் கஷ்டப்பட்டிருந்தால் அதை நினைத்து பார்ப்பது சுகம் இல்லை. அதிலும் குறிப்பாக பள்ளியில் படித்த காதலத்தில் என்னை போன்று பல மாணவிகள் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

பள்ளிகள் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். மாறாக பயப்படச் செய்யக் கூடாது. பி.எஸ்.பி.பி.யில் நடந்த பாலியல் தொல்லை, மோசமான நடவடிக்கை தொடர்பான செய்திகளை பார்த்தபோது அடையாறில் இருக்கும் இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் நான் படித்தபோது பெரும் பிரச்சனையாக இருந்தது தான் நினைவுக்கு வருகிறது.

அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது ஒரு குழந்தையின் சுய மரியாதையை பாதிக்கும். ஹெச்எஸ்எஸ்எஸ்-ல் படித்த நான் உள்பட பலருக்கும் நான் மேற்கூரிய எல்லாம் நடந்திருக்கிறது.

எங்களை கஷ்டப்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை சொல்ல நான் விரும்பவில்லை. பள்ளி சூழல் மிகவும் மோசமாக இருந்தது. என்னை போன்று கஷ்டப்பட்ட அனைவருக்காகவும் வருத்தப்படுகிறேன். பிஎஸ்பிபி மாணவிகளுக்கு நடந்ததை கேட்டு மன அழுத்தமாக இருக்கிறது.பள்ளி சூழல் சரியில்லாதபோதிலும் பலர் வாழ்க்கையில் நல்லபடியாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வரும் வடுக்கள் தான் பெரியவர்களான பிறகு நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை எல்லாம் நினைவுகூர்ந்தது வேதனையாக இருந்தாலும், ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன். பாதிக்கப்பட்ட பலரும் முன்வந்து இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி செய்தால் தான் இனியாவது மாணவ, மாணவியருக்கு நாம் சந்தித்த பிரச்சனைகள் ஏற்படாது என்று நம்பலாம். ஹேஷ்டேகை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிருங்கள். உங்களின் பெயர் வெளியிடப்படாது. இதை உடனே நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!