சென்னை மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த ராகுல் சிராஜ் (23) என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து, ராகுல் சிராஜ் காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
இளம்பெண்ணிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த ராகுல் சிராஜ் (23) என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து, ராகுல் சிராஜ் காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர், வெளியே செல்லலாம் என கூறி துரைப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று அங்கு உல்லாசமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க;- மருமகள் கண்முன்னே நிர்வாணம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா குழந்தையும் சொத்து தருகிறேன் கூறி மாமனார் சில்மிஷம்.!
மேலும், ராகுல் சிராஜ் அந்த இளம்பெண்ணிடம் பல லட்சம் ரூபாயை பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். தன்னை ஏமாற்றுவதை அறிந்த இளம்பெண் ராகுல் சிராஜ் மீது கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், மகளிர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து ராகுல் சிராஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த சிராஜை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!