சிக்கியது 50 பெண்கள், உல்லாசமாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்! கல்யாணம் செய்தது 6 பெண்கள்! போலீஸாரே மிரண்டுபோன க்ரைம்

By sathish kFirst Published Sep 16, 2019, 11:57 AM IST
Highlights

எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடிய நிலையில், அமைந்தகரையில் நிதிநிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் பிரித்வி, என்பவர்தான் இந்த பெண்ணை திருப்பூருக்கு கடத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடிய நிலையில், அமைந்தகரையில் நிதிநிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் பிரித்வி, என்பவர்தான் இந்த பெண்ணை திருப்பூருக்கு கடத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி சேர்ந்த தினேஷ்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் தொழிலாளிகளை ஏற்றி இறக்கும் வேன்களில் டிரைவர்களுக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  அதன்பின்னர்  கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் அங்கேயே தங்கி சிறிது நாள் பின்னர் அங்கிருந்து கல்யாண வீட்டிற்கு தேவைப்படும் வேலைகளையும் செய்திருக்கிறார்

இதனையடுத்து  பெற்றோருடன் சென்னைக்கு வந்த தீனதயாளன், சென்னை விமான நிலைய கட்டுமான பணிகளை பயன்படுத்தப்படும் லாரி குரு என்ற ஓட்டுனருக்கு உதவியாளனாக சேர்ந்திருக்கிறார். அப்போது லாரி ஓட்டுனர் குரு திருமணம் செய்து கொள்வதற்காக அவருடைய அலுவலக தொலைபேசி எண்ணிலிருந்து மேட்ரிமோனியல் தளங்களில் வழியாக வரன் தேடி இருக்கிறார். இந்த நிகழ்வின்போது குருவிற்கு அவருடைய சொந்தத்தில் கல்யாணம் நடந்து முடிந்திருக்கிறது. இதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

ஆனால் அவர் பயன்படுத்திய அலுவலக மொபைல் போனை தீனதயாளன் பயன்படுத்த ஆரம்பித்தபோது, தனது பெயரை ஸ்ரீராம் குரு தீனதயாளன் என சொல்லி தீனதயாளன் அதே பெயரை தான் மேட்ரிமோனி இணையதளங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே நேரத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை மேட்ரிமோனி இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட தீனதயாளன்.அந்தப் பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னர் அவர் எம்பிஏ பட்டதாரி என்பதையும் தெரிந்து பின் ஆசை வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்த ஒரே வாரத்தில் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி சென்னையிலிருந்து இருவரும் திடீரென மாயமாகி விட்டனர். இதன் பின்னர் பிரியதர்ஷனிடம் இருந்த நகை மற்றும் பணத்தை வைத்து 3 மாதம் கோயம்புத்தூரர் சோமனூரில்  குடும்பம் நடத்தி இருக்கிறான் இதன்பின்னர் சோமனூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பிரியதர்ஷினி தீனதயாளன் ,சுமார் 2 வாரம் பார்த்துள்ளனர்.

இதனிடையே, பிரியதர்ஷினியின் உறவினர்கள் பிரியதர்ஷினி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு விட்டதாக தீனதயாளனுக்கு தெரியவர உடனடியாக வேலை பார்த்த கடையில் இருந்து 10000 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு, சென்னைக்கு இருவரும் வந்துள்ளனர். இதனிடையே கடையின் உரிமையாளர் சோமனூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் கோயமுத்தூர் போலீசார் சென்னையில் பிரியதர்ஷினி மற்றும் தீனதயாளன் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்தனர்.

பல நாட்களுக்கு பின் தனக்கும் தனது மனைவியான பிரியதர்ஷினிக்கும் பெயில் வாங்கிக்கொண்டு  கோயமுத்தூர் சிறையிலிருந்து வெளியே வருகின்றனர். இதனிடையே கையில் பணம் இல்லாத நேரத்தில் திருப்பதி தேவஸ்தான சொந்தமான இலவச தங்கும் இடத்தில் தங்கி அங்கே வருகின்றவர்களிடம் ஏதாவது பேசி அவர்களின் கவனத்தை திசை திருப்பி பணம் மற்றும் நகைகளை திருடி இருக்கிறார் தீனதயாளன்.

சென்னைக்கு வந்த பின்னர் தீனதயாளன் மீண்டும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக திருச்சியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை இதே போன்ற திருமண ஆசைய காட்டியுள்ளார். பின்னர் அவரை தஞ்சாவூருக்கு வரவழைத்து இருக்கிறார் உடன் ப்ரியதர்ஷினியையும் கூட்டி சென்று இருக்கிறார். இதனிடையே தஞ்சாவூரில் ஒரு காதல் ஜோடியை பார்த்ததும் உடனடியாக அவரிடம் தனக்கு தம்பி மற்றும் தம்பி மனைவியாக நடிக்கும் மாறும் அதற்கு பணம் கொடுத்து விடுவதாகவும் பேரம் பேசியிருக்கிறார், இதற்கு அந்த ஜோடியும் சம்மதித்து இருக்கிறது.

இதன் பின்னர் தஞ்சை பேருந்து நிலையத்துக்கு வந்த அனிதாவிடம் தனது மனைவியான பிரியதர்ஷினியை அக்கா என சொல்லி, அருகே இருந்த காதல் ஜோடியை தனது தம்பி தம்பி மனைவி என்றும் அனிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதனை நம்பிய அனிதா தீனதயாளன் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதிக்கிறார்.

இதன் பின்னர் பிரியதர்ஷினியின் முன்பே வைத்து அனிதாவை திருச்சியில் வைத்து கல்யாணம் செய்து கொள்கிறார் தீனதயாளன். அனிதாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும் அதன்மூலம் பிரியதர்ஷினியின் கல்லூரி சான்றிதழ்களை சோமனூரில் உள்ள வேலை பார்த்த கடையில் இருந்து மீட்டுவிடலாம் என்று பிரியதர்ஷனியிடம்  தீனதயாளன் சொல்ல, இதற்காக பிரியதர்ஷினி தீனதயாளன் உடனே இருந்திருக்கிறார்.

இதனிடையே சென்னையில் பிரியதர்ஷினி மற்றும் அனிதாவுடன் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் தீனதயாளன் மீது அனிதாவிற்கு சந்தேகம் வரவே, இதனைத் தொடர்ந்து உடனடியாக தனது சொந்த ஊருக்கு திருச்சிக்கு சென்று நாவல்பட்டு போலீசில் தீனதயாளன் மீது புகார் அளித்திருக்கிறார் அந்த புகாரை விசாரித்த நாவல்பட்டு போலீசார் தீனதயாளன் மீது கற்பழிப்பு வழக்கை பதிவு செய்கின்றனர்.

இதனிடையே நாவல்பட்டு போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில், இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவருகிறது. உடனடியாக அவர்கள் இருவரையும் கடந்த 2016 ம் ஆண்டு கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றனர்.இந்த செய்தி கேள்விப்பட்டு ஆந்திரா மாநில காலகஸ்தி போலீசார் திருப்பதியில் இவன் மீது திருட்டு மற்றும் மோசடி வழக்குகள் இருப்பதாக கூறி அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கோயமுத்தூர் வழக்கு தொடர்பாக ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூர் வரும் பொழுது போலீஸாரிடமிருந்து தப்பி சென்னைக்கு மீண்டும் தப்பி ஓடிவந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் தீனதயாளன்.

இதனிடையே சென்னைக்கு தப்பி வந்த தீனதயாளன் உடைய ஏற்கனவே அடிபட்ட கை மற்றும் கால்களில் மோசமடைய சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் முன்பு சிம் கார்டுகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை போடுகிறார் தீனதயாளன்.

இதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு திரும்பவும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக கணவனை இழந்த சுங்குவார்சத்திரம் சேர்ந்த புனிதா என்ற பெண்ணை திருமண ஆசை காட்டி திருமணம் செய்து கொள்கிறார்.திருமணமான இரண்டே நாட்களில் புனிதாவை வெளியூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் புனிதாவின் உடைய திருமணமான குழந்தைகளுடைய தோழியின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதே, நேரத்தில் திருமணமான தோழியுடன் ஏற்பட்ட திடீர் நெருக்கத்தால் அந்த தோழியும் தீனதயாளன் வீட்டை விட்டு திடீரென ஒரே நாளில் மாயமாகி உள்ளனர். இதன் பின்னர் ஒரு மாதமாக ஒரு மாத காலமாக திருப்பதியில் திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்திருக்கிறான் தீனதயாளன் இதனையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன் அங்கிருந்து தப்பி திரும்பவும் கோயம்புத்தூருக்கு சென்றுள்ளான். 

கோயம்புத்தூருக்கு சென்ற தீனதயாளன் அங்கேயே தனது பள்ளி தோழன் அங்கே உள்ள பிரபலமான கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான் அவனை சந்திப்பதற்காக கல்லூரி சென்றபோது நண்பனுடைய தோழியிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக வழக்கம்போல கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியை திருமணம் செய்து கொள்வதாக மாணவி பெற்றோரிடம் கூறியிருக்கிறான்.

இதனிடையே அந்த மாணவியின் தோழியுடன் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து.  கடந்த 2018 நவம்பர் மாதம் வேளச்சேரியில் வைத்து குடும்பம் நடத்தி இருக்கிறார். இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார், அந்த கல்லூரி மாணவிக்கும் தாய் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே மீண்டும் கையில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வடபழனியில் திடீரென சினிமா ஷூட்டிங்ல் போலீஸ் SI ஆக வேடம் போடுவதற்காக தீனதயாளன் நடித்திருக்கிறார். அதில் பணம் கிடைக்கவே இதன் பின் வேளச்சேரியில் அவ்வப்போது போலீஸ் எஸ்.ஐ உடையில் வளம் வந்திருக்கிறார் தீனதயாளன். இதனிடையே, சென்னை மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய தனியாக வரக்கூடிய இளம் பெண்களையும் விட்டுவைக்காத, தீனதயாளன் அவர்களுக்கு அறிவுரை சொல்வது போல சில பல பெண்களையும் தன்னுடைய ஆசைக்கு தீர்த்திருக்கிறார்.

இதனிடையே, வேளச்சேரியில் உள்ள அக்கம் பக்கத்தினர் அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏராளமான பண மோசடியில் ஈடுபடுகிறார். நாளடைவில் வேலை சொன்ன படி கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே உடனடியாக வேளச்சேரியில் வீட்டை காலி செய்துவிட்டு, நெற்குன்றம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இதன்பின்பு சென்னை அமைந்தகரையில் கவின் பிசினஸ் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார். இதற்கு ஆல் தெரிவிப்பதற்காக ஜஸ்ட் டயல் மூலம் அவர்களின் போட்டோவை பார்த்த பின்னரே வேலைக்கு ஆள் எடுக்க இருக்கிறார். இந்த நிறுவனத்தில் சுமார் ஒரே நேரத்தில் முப்பது பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளன முப்பது பெண்களுமே 21 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த கூடிய பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ படித்த பெண்களிடம் தனக்கும் தனது மனைவிக்கும் சரியான புரிதல் இல்லை, என சொல்லி பரிதாபத்தை ஏற்படுத்தி அதன் பின்னர் அவர்களில் பலரை தனது ஆசைக்கு வீழ்த்தி உல்லாசம் அனுபத்திருக்கிறான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே நிறுவனத்தில் 21 வயது உடைய கவிதா என்ற பெண்ணை, தனது வலையில் வீழ்த்த மறுக்கிறார். இதன் பின்னர் அந்தப் பெண் இதனை தனது ஆசையில் வீழ்த்தி பெங்களூரு ஹைதராபாத் மதுரை என பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார் தீனதயாளன். இதே நேரத்தில் பெண்ணின் பெற்றோர் சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் புகார் கொடுக்க கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் தேடிய எழும்பூர் போலீசார், அந்த இளம் பெண்ணுடன் மதுரையில் வைத்து தீனதயாளன் கைது செய்துள்ளனர். 

இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவரிடமிருந்து பணம் நகை என மோசடி செய்து, அவர்களை லாட்ஜில் வைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறிய சுமார் 6 பெண்களை கூடவே வைத்துக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். 

click me!