தூத்துக்குடியில் பயங்கரம்... இருசக்கர வாகனத்தில் அதிவேகம்... தட்டிக்கேட்ட 2 பேர் வெட்டிப் படுகொலை..!

Published : Sep 16, 2019, 11:25 AM IST
தூத்துக்குடியில் பயங்கரம்... இருசக்கர வாகனத்தில் அதிவேகம்... தட்டிக்கேட்ட 2 பேர் வெட்டிப் படுகொலை..!

சுருக்கம்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (38). மெரைன் இன்ஜினியராக இருந்து வந்துள்ளார். அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களில் வந்த 7 பேர் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதில், 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசன், விவேக்கை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை முருகேசன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், முருகேசன் மற்றும் அவரது நண்பரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இந்த இரட்டை கொலையில்  லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (21), பிரையண்ட் நகர் மாரிச்செல்வம் (25), அந்தோணியார்புரம் மாரிமுத்து (22), அருண், மகாலிங்கம், வேல்முருகன், முகேஷ் ஆகிய 7 பேர் சேர்ந்து முருகேசன் மற்றும் விவேக்கை வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது. இந்நிலையில் மாரிச்செல்வம், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்