உல்லாசமாக இருக்க பணத்தை தண்ணியாக இறைத்த பெண்.. திருப்பி கேட்டதால் படுகொலை செய்த கள்ளக்காதலன்?

Published : May 17, 2022, 03:19 PM IST
உல்லாசமாக இருக்க பணத்தை தண்ணியாக இறைத்த பெண்.. திருப்பி கேட்டதால் படுகொலை செய்த கள்ளக்காதலன்?

சுருக்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா வடகெரே கிராமத்தை சேர்ந்தவர் சன்னபசப்பா. இவரது மனைவி பாக்யஸ்ரீ (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாக்யஸ்ரீக்கும், ரியாஸ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இளம்பெண் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா வடகெரே கிராமத்தை சேர்ந்தவர் சன்னபசப்பா. இவரது மனைவி பாக்யஸ்ரீ (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாக்யஸ்ரீக்கும், ரியாஸ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ரியாசுக்கு, பாக்யஸ்ரீ பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை திரும்பதர ரியாஸ் மறுத்து விட்டார்.

இதுதொடர்பாக பாக்யஸ்ரீக்கும், ரியாசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பாக்யஸ்ரீயின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பாக்யஸ்ரீயை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாக்யஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.  பாக்யஸ்ரீயை, ரியாஸ் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை