சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. லாரியால் காரை மோதவிட்டு அதிமுக பிரமுகர் கொலை.. வெளியான சிசிடிவி காட்சிகள்.!

Published : May 17, 2022, 12:34 PM ISTUpdated : May 17, 2022, 12:35 PM IST
சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. லாரியால் காரை மோதவிட்டு அதிமுக பிரமுகர் கொலை.. வெளியான சிசிடிவி காட்சிகள்.!

சுருக்கம்

நேற்று முன்தினம் இரவு இவர் மீஞ்சூர் அடுத்த குருவிமேடு பகுதியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு தனது மனைவி இரு மகள்களுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். குருவி மேடு அசோக் லைலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கார் மீது மோதியது. 

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் 10 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மனோகரன்(38). இவர் அதிமுகவின் பிரமுகரான இவர்  அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால் 2வது முறையாக வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் மீஞ்சூர் அடுத்த குருவிமேடு பகுதியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு தனது மனைவி இரு மகள்களுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். குருவி மேடு அசோக் லைலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கார் மீது மோதியது. 

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது. அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்து மனோகரனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனை நேரில் கண்ட அவரது மனைவி சர்மிளா மற்றும் மகள்கள் அலறி துடித்தனர்.

உடனே கொலை வெறி கும்பல் தாங்கள் வந்த அதே லாரியில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்டு திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துதுவிட்டதாக கூறியுள்ளனர். இது கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கார் மீது லாரியை மோதவிட்டு மர்ம கும்பல் கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!