மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை..50 வயசுல இது தேவையா ? அதிர்ச்சி சம்பவம்

Published : May 17, 2022, 11:24 AM IST
மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை..50 வயசுல இது தேவையா ? அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள வாண்டரசன்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (50), சரிவர வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9-9-2020 அன்று அங்குள்ள ஒரு பகுதிக்குச் சென்றுள்ளான். அங்கு சுமார் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்த்து இருக்கிறான். சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்ததை அறிந்துக் கொண்ட சக்திவேல், அங்குள்ள ஓடைக்கு கடத்திச் சென்று அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வரவே அவர் ஒடியுள்ளான். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம். எழிலரசி தீர்ப்பு தீர்ப்பு கூறினார்.

அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறையிலிருக்கவும் உத்தரவிட்டார். இதுகுறித்து வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் தி. கலாசெல்வி கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம்.. சென்னையில் கொடி கட்டி பறக்கும் பாலியல் தொழில் - சிக்கிய ஒடிசா கும்பல் !

இதையும் படிங்க : நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிக்க தான் இருக்கிறது.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் சர்ச்சை பேச்சு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!