
கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெகன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார். அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணமான பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்துள்ளார்.
இதையும் படிங்க;- அதிர்ச்சி.. தங்கை முறை பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை.!
அப்போது அந்த பெண்ணின் கணவர் ஜெகன் என்பவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் தனது மனைவிக்கு தெரியவந்தது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்னர் அஸ்வதி தனது வீட்டில் கழிவறையில் கடலமாக கிடந்தார். கழுத்தில் துணியால் நெறிக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி தனிப்படை அமைத்து விசாரித்தனர். அடிக்கடி அஸ்வதி செல்போனில் தனது தோழியின் கணவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- எங்களுக்கு வெட்டிய குழியில் நாங்கள் மட்டும் விழப்போதில்லை.. நீங்களும் விழப்போகிறீர்கள்.. எச்சரிக்கும் ராமதாஸ்
இதனையடுத்து, ஊட்டிக்கு விரைந்த போலீசார் ஜெகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- அஸ்வதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த, ஜெகன் அங்கு சென்றுள்ளார். அப்போது அஸ்வதி தன்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு ஜெகனுடன் கூறியதாக தெரிகிறது.. ஏற்கனவே தன்னைவிட்டு மனைவி பிரிந்து விட்ட நிலையில் கள்ளக்காதலியும் இனிமேர் நாம் சந்திக்க வேண்டாம் என்று கூறியதும் ஜெகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கள்ளக்காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அஸ்வதி கத்தி கூச்சல் போட முயன்ற போது உடனே சுடிதார் துப்பட்டாவை எடுத்து அஸ்வதியின் கழுத்தை நெறுத்து துடிதுடிக்க கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக ஜெகன் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.