ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. அண்ணன் கள்ள உறவால் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

Published : Nov 05, 2021, 12:19 PM IST
ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. அண்ணன் கள்ள உறவால் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.  சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். 

மயிலாடுதுறையில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.  சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். 

இதையும் படிங்க;- #BREAKING குடிமகன்களால் நிகழ்ந்த சாதனை.. கடைசி 2 நாள் மூக்குபிடிக்க அடித்த சரக்கு.. கல்லா கட்டிய அரசு..!

இதனையடுத்து, சதீஷை கொலை செய்ய முற்பட்டனர். உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க சதூஷ் தலைதெறிக்க ஓடினர். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் தூரத்தி சென்று கொடூரமாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- காண்டாகும் எடப்பாடியார்... ஓபிஎஸ் காலில் விழுந்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி..!

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷ்க்கு  வினோத் என்ற அண்ணன் உள்ளார். வினோத்துக்கும் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியையும், வினோத்தையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. 

இதையும் படிங்க;- திருமணத்திற்கு முன்னே 2 பேருடன் தொடர்பு.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய காமவெறி பிடித்த மனைவி..!

இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான் முன்விரோதம் காரணமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வினோத்தின் சகோதரர் சதீஷை ஓட ஓட விரட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் பழனிவேல் மற்றும் அவரது மச்சான் மாதவன் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!