இளஞ்சிட்டை பார்த்ததும் பத்திக்கிச்சு.. 20 வயது பெண்ணை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த தோழியின் கணவர்.!

By vinoth kumar  |  First Published Nov 3, 2021, 9:33 PM IST

பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் கவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.


கோவையில் இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது ஆண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார். அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணமான பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் கவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அஸ்வதி தனது வீட்டில் கழிவறையில் கடலமாக கிடந்தார். கழுத்தில் துணியால் நெறிக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி தனிப்படை அமைத்து விசாரித்தனர். அடிக்கடி அஸ்வதி செல்போனில் ஒருவருடன் பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி உயிரிழந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

click me!