திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாடூர் காலனியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மகன் ராசுகுட்டி(25). ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இவரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உறவுக்கார பெண் கீர்த்தனா(22) ஆகியோரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் ராசுகுட்டிக்கு தங்கை முறை என்பதால் இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாடூர் காலனியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மகன் ராசுகுட்டி(25). ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இவரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உறவுக்கார பெண் கீர்த்தனா(22) ஆகியோரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் ராசுகுட்டிக்கு தங்கை முறை என்பதால் இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!
ஆனால், பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் பிரித்து விட்டர். இதனால், இருவரும் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நான் காதலித்து திருமணம் செய்த உறவுக்கார பெண் கீர்த்தனாவை தன்னிடம் சேர்த்து வைக்காமல் பெற்றோர் பிரித்து வைத்துள்ளதாக புகார் அளித்தார்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!
இதனையடுத்து, இரு குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்காக போலீசார் அழைத்தனர். ஆனால், பெண்ணின் உறவினர்கள் வரவில்லை. இதனால் விசாரணையை ஒத்திவைத்தனர். இதனிடையே, கடந்த வாரம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய ராசுகுட்டி வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க;- மாமியாருடன் அடிக்கடி உல்லாசம்.. எவ்வளவு சொல்லியும் கன்டினியூவான கள்ளக்காதல்.. இறுதியில் மருமகன் செய்த காரியம்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராசுகுட்டி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராசுகுட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தங்கை முறை பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ராசுகுட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.