லிப்ட்டில் இளைஞரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்.. ஒரே அலறல்.. நடந்தது என்ன?

Published : May 21, 2022, 09:56 AM IST
லிப்ட்டில் இளைஞரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்.. ஒரே அலறல்.. நடந்தது என்ன?

சுருக்கம்

கடந்த 6 மாதங்களாக அந்த பெண்ணை காதலிப்பதாகவும் சொல்லி வந்திருக்கிறார். நட்பாக பழகி வந்தவர் திடீரென்று காதலிப்பதாக சொல்லவும் அந்த காதலை ஏற்காமல் அந்த பெண் இருந்து வந்துள்ளார். ஆனால், அந்த வாலிபரின் நோக்கம் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வது தான் என்பதை அந்தப்பெண்ணும் அறிந்து கொண்டார்.

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணிடம் லிப்டில் வைத்து நடந்து கொண்ட வாலிபரின் வெறிச்செயலால் அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்த அலையங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து  வந்துள்ளார். அப்போது  சிவராஜ் குலால்(28) என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவருமே நட்புடன் தான் பழகி வந்தனர்

கடந்த 6 மாதங்களாக அந்த பெண்ணை காதலிப்பதாகவும் சொல்லி வந்திருக்கிறார். நட்பாக பழகி வந்தவர் திடீரென்று காதலிப்பதாக சொல்லவும் அந்த காதலை ஏற்காமல் அந்த பெண் இருந்து வந்துள்ளார். ஆனால், அந்த வாலிபரின் நோக்கம் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வது தான் என்பதை அந்தப்பெண்ணும் அறிந்து கொண்டார். ஆகையால், அவரது காதலை ஏற்காமல் இருந்திருக்கிறார்.

ஆனாலும், விடாமல் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்திருக்கிறார். தனது ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அப்பெண் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார். இதனால் தனக்கு கிடைக்காத அந்த பெண் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் எண்ணினார். நேற்று முன்தினம் வழக்கம் போல அந்தப் பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார். அப்போதும் தனது ஆசைக்கு இணங்கும்படி அந்த பெண்ணை விடாமல் சிவராஜ் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.  அதற்கு அந்த பெண் மறுத்து கடுமையாக கடுமையான வார்த்தையால் திட்டியுள்ளார். பேசி விட்டு லிப்டில் ஏறி இருக்கிறார். திடீரென்று சிவராஜ்ஜும் லிப்டுக்குள் புகுந்து இருக்கிறார்.

லிப்ட் புறப்பட்டபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்து இருக்கிறார். பின்னர் லிப்டில் இருந்து வெளியேறி தப்பி ஓடி இருக்கிறார். அங்கிருந்தவர்கள் லிப்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?