கர்நாடக மாநிலம் பெங்களூரு பிடிஎம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், வீடு திரும்புவதற்காக போதையில் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார்.
பெங்களூருவில் ராபிடோ பைக்கை புக் செய்து பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பிடிஎம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், வீடு திரும்புவதற்காக போதையில் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார். அதன்படி, அந்த ரேபிடோ டிரைவர் வந்து அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு அவர் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- வேலைக்காரியுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்..!
அப்போது, அந்த இளம்பெண் அதிகமாக குடித்திருந்தால் சுயநினைவில் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரேபிடோ பைக் ஓட்டினர் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், தனது நண்பர்களுக்கும் போன் செய்து வரவழைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த போது இளம்பெண்ணை கடுமையான உடல் வலியை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த ரேபிடோ ஓட்டுநரும், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- கணவர் ஃபாரின் சென்ற நேரத்தில் தாய் மாமா மகனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவரை போட்டு தள்ள முயன்ற மனைவி.!