சென்னை புறநகர் ரயிலில் போதையில் பெண் பயணியை கட்டிப் பிடித்த ஆசாமி; சுளுக்கு எடுத்த சக பயணிகள்!!

By Narendran S  |  First Published Nov 29, 2022, 4:54 PM IST

சென்னை புறநகர் ரயிலில் ஒரு பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி, கட்டிப் பிடித்து அராஜகம் செய்த போதை ஆசாமியை சக பயணிகள் நையப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.


சென்னை புறநகர் ரயிலில் ஒரு பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி, கட்டிப் பிடித்து அராஜகம் செய்த போதை ஆசாமியை சக பயணிகள் நையப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை நகருக்கு தினமும் புறநகரங்களில் இருந்து பெரிய அளவில் வேலைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், சென்னை நகரில் இருந்து பெரிய அளவில் புறநகருக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். திங்கள் கிழமை (நேற்று) வழக்கம் போல சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு ஒரு ரயில் புறப்பட்டது. அப்போது  மதுபோதையில் இருந்த ஆசாமி வந்து அமர்ந்தார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சு..! வாட்ஸ் அப் கால் ஒட்டுக்கேட்குறாங்க..? பரபரப்பு புகார் கூறிய சவுக்கு சங்கர்

Tap to resize

Latest Videos

இவர் தொடர்ந்து ஒரு பெண் பயணிக்கு துன்புறுத்தல் அளித்து வந்தார். இதை சகித்துக் கொண்டு உடன் வந்த பயணிகள் கவனித்து வந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி, அந்தப் பெண்ணை கட்டிப் பிடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெட்டியில் அமர்ந்து இருந்த சக பயணிகள், மதுபோதையில் இருந்த ஆசாமியை சரமாரியாக தாக்கினர். மற்ற சில பயணிகள் இடைமறித்து தடுத்தனர். இந்த நேரத்தில் மேலும் பல பயணிகள் ஆத்திரமடைந்து போதை ஆசாமியை தாக்கினர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். 

இதையும் படிங்க: கோவையில் திடீரென குவிந்த போலீசார்..! தீவிர வாகன சோதனை..! என்ன காரணம் தெரியுமா..?

போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் இருந்தவர் வடஇந்தியாவை சேர்ந்தவர் என்றும், அவருக்கு மொழி தெரியவில்லை என்றும், விசாரிக்கும்போது, அந்த ஆசாமி நல்ல போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரை வீடியோ எடுக்கும்போது கூட ஒத்துழைக்க முடியாத அளவிற்கு போதையில் இருந்தவர், ஆபாச படங்களில் வருவது போன்று உடல் அசைவுகளைக் காட்டி இருக்கிறார். இவர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

click me!