விழுப்புரத்தில் பாமக மாவட்ட துணைத்தலைவரை கொன்றது இதற்காக தான்.. கைது செய்யப்பட்ட 7 பேர் பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2022, 12:44 PM IST
Highlights

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (45). பாமக மாவட்ட துணைத் தலைவர். இவர் கடந்த 24ம் தேதி வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. 


விழுப்புரத்தில் பாமக மாவட்ட துணைத்தலைவர் ஆதித்யன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்கான கொலை செய்தேன் என போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (45). பாமக மாவட்ட துணைத் தலைவர். இவர் கடந்த 24ம் தேதி வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;- வேலைக்காரியுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்..!

இந்த கொலை சம்பவம் தொடா்பாக மெக்கானிக் ராகவன்(33), மதன் குமார் (20), ராமு(45), குயில் என்கிற லட்சுமி நாராயணன்(41), வினோத்(33), விஷ்ணு(40), பரந்தாமன்(31) ஆகிய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ராமு 50 லட்சத்திற்கு செலவு செய்தும் தோல்வி அடைந்தார். இதனால், ராமு குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த ஆதித்யனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து வெட்டி படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை மேலும் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;-  ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

click me!