திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு

Published : Aug 25, 2026, 08:29 PM IST
Crime

சுருக்கம்

திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜோதிடர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கோவையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் மீது பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தனது திருமணத்திற்காக தன் பெற்றோர் நீண்ட காலமாக மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும், ஆனால் மாப்பிள்ளை அமையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் பல பரிகாரங்கள் செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு சரயான வரன் அமையாததால் பெற்றோரின் கஷ்டத்தைப் பார்த்து மிகவும் மனஉளைச்சலுக்கு ஆானேன். இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலமாக கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அவர் சில பரிகாரங்களைச் செய்தால் விரைவில் உனக்கு திருமணம் நடக்குமென கூறினார்.

பரிகாரம் என்ற பெயரில் பலமுறை அவர் என்னை நேரில் சந்தித்தார். பின்னர் ஒருகட்டத்தில் அவரே என்னை திருமணம் செய்துகொ்வதாக ஆசை வார்த்தைக் கூறி கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்தார். அவர் என்னை திருமணம் செய்துகொள்வார் என நம்பினேன். மேலும் கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி நான் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கேட்டதால் அதனை கொடுத்தேன். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூற ரூ.1.50 லட்சம் பெற்றுக்கொண்ட நிலையில் அதன்பின் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் ஜோதிடர் தொடர்பாக விசாரித்தபோது அவருக்கு முன்னதாகவே திருமணமாகிவிட்டதாக சொன்னார்கள். இது தொடர்பாக அவரிடம் முறையிட்ட போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் எனக்கு தகந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை நம்பவைத்து ஏமாற்றிய ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனுவில் குறிப்பிட்டு்ளார். ஜோதிடர் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகார் கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்