திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே காணாமல் போன இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா என காவல் துறையினர் விசாரணை.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சங்கீதா. 12ம் வகுப்பு முடித்துவிட்டு தற்சமயம் வீட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு முதல் சங்கீதாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் அர்ஜுனன் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தனியார் பேருந்தில் கணவர் கண் முன்னே கர்ப்பிணியிடம் சில்மிஷம்; போதை ஆசாமிக்கு பாடம் புகட்டிய மக்கள்
இந்த சூழ்நிலையில் பரமேஸ்வரபுரத்தில் உள்ள கிணறு ஒன்று பெணின் சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராதாபுரம் ஆீமுசம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இறந்தது காணாமல் போன இளம்பெண் சங்கீதா என தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலை? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு