போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

By Velmurugan sFirst Published Apr 19, 2023, 8:54 AM IST
Highlights

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை மர்ம கும்பல் காவல் துறையினரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்லில் சின்னத்தம்பி என்பவர் கடந்த மாதம் பழிக்கு பழியாக ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுகலைச் சேர்ந்த யுவராஜ் குமார் (வயது 29), விக்னேஷ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட போது இவர்கள் இருவருக்கும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டதால் யுவராஜ்குமாரும், விக்னேஷ்சும் சிகிச்சைக்காக கடந்த மாதம் 22ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி கொலைக்கு பழிக்குபழி வாங்கும் நோக்கத்தில் இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்தது.

எங்கள் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளோம் - அமைச்சர் நேரு திட்டவட்டம்

மருத்துவமனையில் 4வது தளத்தில் சிகிச்சையில் இருந்த யுவராஜ்குமார் மற்றும் விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல்  அவர்கள் இருந்த வார்டுக்குள் நுழைந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் காவலில் இருந்த திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் முகத்தில் மர்ம கும்பல் மிளகாய் பொடியை வீசி உள்ளது. பின்னர் யுவராஜ்குமார் மீதும் விக்னேஷ் மீதும் மிளகாய் பொடியை தூவி மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது.

இதைப் பார்த்த அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட தொடங்கினர்.  சுதாரித்து எழுந்த காவலர்கள் மர்ம கும்பலை சுடுவதற்காக துப்பாக்கியை ஏந்தி குறி வைத்தனர். அப்போது காவலர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியது. இதனால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

எங்கள் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளோம் - அமைச்சர் நேரு திட்டவட்டம்

தகவல் அறிந்த காவல் துறைியனர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த யுவராஜ்குமாரும், விக்னேஷும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான காவலர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாவட்ட எல்லை பகுதிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

click me!