தனியார் பேருந்தில் கணவர் கண் முன்னே கர்ப்பிணியிடம் சில்மிஷம்; போதை ஆசாமிக்கு பாடம் புகட்டிய மக்கள்

By Velmurugan s  |  First Published Apr 19, 2023, 11:26 AM IST

திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தில் கர்ப்பிணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை பயணிகள் அடித்து, உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


திண்டுக்கலில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்  சின்னாளப்பட்டி காந்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு  கர்ப்பிணி பெண் திண்டுக்கல்லில் மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டு  அவரது கணவருடன் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பேருந்தில் மனைவிக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. இதனால் கணவர் பின்பக்கம் நின்று கொண்டே வந்துள்ளார். 

கர்ப்பிணிப் பெண்ணருகே ஒரு ஆசாமி நின்று கொண்டு பயணித்துள்ளார். பேருந்து தோமையார்புரம் அருகே சென்றபோது அந்த போதை ஆசாமி கர்ப்பிணிப் பெண்ணை உரசி கொண்டு சில்மிஷம் செய்து கொண்டே வந்துள்ளார். இதைப் பார்த்த அந்த கர்ப்பிணிப் பெண் கணவரை கூப்பிட்டு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணின் கணவர் அந்த போதை ஆசாமிடம் எச்சரிக்கை விடுத்து தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

ஆனால் அந்த ஆசாமி போதை மயக்கத்தில் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தபடியே வந்துள்ளார். இதனால் கர்ப்பிணி பெண்ணின் கணவர்  பேருந்தை அம்பாத்துரை  காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். காவல் நிலையம் சென்றால் பேருந்து செல்ல நேரமாகும் என்பதால் பேருந்தை காந்திகிராமம் பிரிவில் நிறுத்தி நடத்துனர் பேருந்தை விட்டு கீழே இறக்கி உள்ளார். அதே இடத்தில் தான்  அந்த கர்ப்பிணி பெண்ணும், அவருடைய கணவரும் இறங்க வேண்டும் என்பதால் அவர்களும் இறங்கினர். அப்போது நடந்த விஷயத்தை அங்கு கூடியிருந்தவர்கள் கேட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் போதை ஆசாமியை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

கோவையில் கடன் தொல்லை தாங்காமல் வயதான தம்பதி தற்கொலை

இதில் அந்த நபருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதோடு இறுதியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோட்டில் உள்ள வடகாடுபட்டியை சேர்ந்த பில்லான் (வயது 43) என்றும், திண்டுக்கல்லில் கான்கிரீட் வேலை செய்வதாகவும், குடிபோதையில் பேருந்து மாறி ஏறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த நபரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!