இளம்பெண் பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு நாட்கள் நெருங்க ஆரம்பிக்கவும் பவித்ராவின் குடும்பத்தினர் முத்துகுமார் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
காதலிப்பதததாக இளைஞரிடம் பழகி கல்யாணம் முடிந்த அடுத்த நாளே 15 லட்சத்துடன் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு நாட்கள் நெருங்க ஆரம்பிக்கவும் பவித்ராவின் குடும்பத்தினர் முத்துகுமார் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க;- கல்லூரி பேராசிரியைக்கும் இஎஸ்ஐ மருந்தக ஊழியருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்கள்
திருமண செலவுக்கு பணம் இல்லாததால் திருமணம் செய்ய வேண்டுமானால் திருமண செலவிற்கு15 லட்சம் ரூபாய் வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். தற்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் திருமணம் முடிந்தவுடன் 15 நாட்களில் திரும்ப தருவதாக கூறினர். பெண் அழகாக இருப்பதால் இதை விட்டுவிடக்கூடாது என்பதால் 15 லட்சம் ரூபாயை பவித்ரா குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். ஒருவழியாக திருமணம் முடிந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்த அடுத்த நாளே முத்துக்குமாருடன் வாழ முடியாது என பவித்ரா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும், சீர்வரிசை பொருட்களையும் பவித்ரா எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமாரின் பெற்றோர் பவித்ராவை பலமுறை அழைத்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னர் நடத்திய விசாரணையில் தான் பவித்ரா மது போதைக்கு அடிமையானவர் எனவும் இதே போல பல ஆண்களுடன் பழகி பணம் நகையை மோசடி செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!