என்னுடன் பேச மாட்டியா சொல்லு.. சிறுவன் செய்த செயலால் வலி தாங்க முடியாமல் கதறிய கல்லூரி மாணவி

Published : Jul 14, 2022, 12:26 PM ISTUpdated : Jul 14, 2022, 02:43 PM IST
என்னுடன் பேச மாட்டியா சொல்லு..  சிறுவன் செய்த செயலால் வலி தாங்க முடியாமல் கதறிய கல்லூரி மாணவி

சுருக்கம்

தன்னுடன் பேச மறுத்த கல்லூரி மாணவியை 17 வயது சிறுவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தன்னுடன் பேச மறுத்த கல்லூரி மாணவியை 17 வயது சிறுவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வம்சி (18). இவர் ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களாக சிறுவனுடன் பழகுவதை கல்லூரி மாணவி திடீரென நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. 

இதனால் கடும் கோபத்தில் இருந்த சிறுவன் நேற்று முன்தினம் மதியம் கொளத்தூர் பாலாஜி நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே வம்சி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை மறித்து சிறுவன் ஏன் என்னிடம் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து திடீரென சிறுவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வம்சியை பல்வேறு இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். 

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அப்பகுமி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை