அளவுக்கு மீறி வயகரா மாத்திரை.. அடங்காத கணவன், அலறி ஓடிய மனைவி.. கடைசியில் நடந்த பயங்கரம்.

Published : Jun 08, 2022, 07:25 PM ISTUpdated : Jun 08, 2022, 07:27 PM IST
அளவுக்கு மீறி வயகரா மாத்திரை.. அடங்காத கணவன், அலறி ஓடிய மனைவி.. கடைசியில் நடந்த பயங்கரம்.

சுருக்கம்

அளவுக்கு அதிகமாக வயகரா  மாத்திரைகள் சாப்பிட்டதால் நிரந்தர விரைப்புத்தன்மை பிரச்சினைக்கு இளைஞர் தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக வயகரா  மாத்திரைகள் சாப்பிட்டதால் நிரந்தர விரைப்புத்தன்மை பிரச்சினைக்கு இளைஞர் தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நண்பர்கள் கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில் இந்த வினோத பிரச்சனைக்கு இளைஞர் ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடமுடியாத நிலைமைக்கு தள்ளப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் திருமணத்திற்குப் பின்னர் மனைவியை திருப்திபடுத்த முடியாமல் இளைஞர்கள் பரிதவிக்கும் அவலங்கள் அரங்கேறி வருகிறது. இது போன்ற பிரச்சனைக்கு ஆளான இளைஞர் ஒருவர் நண்பர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் அளவுக்கு மீறி வயகரா மாத்திரை எடுத்துக் கொண்டதால் கடுமையான விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ்  என்ற இடத்தை சேர்ந்தவர்  மோகித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.

ஆனால் ஆண்மை குறைபாடால் தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார். மனைவியை திருப்திப்படுத்த முடியாத இயலாமையில் இவர் தவித்துவந்த நிலையில், நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். அது அப்போதைக்கு நல்ல பலன் கொடுக்கவே அதைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரின் எல்லைமீறிய நடவடிக்கைகளால் மனைவி மோகித்துடன் சண்டைபோட்டுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றார். அதை அடுத்து பெற்றோர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் மோகித்துடன் மனைவியை சேர்த்து வைத்தனர். இதையடுத்து பல்வேறு உடல்நலக் குறைவால் அவர் அவதிப்பட்ட வந்தார்.  மீண்டும் அவர் வயகரா மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு திடீரென ஆணுறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டு தொடர் விரைப்புத்தன்மைக்கு ஆளானார்.

பல மணி நேரங்கள் ஆகியும் அவருக்கு விறைப்புத்தன்மை குறையவில்லை, ஆணுறுப்பில் கடுமையான வலியும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் மோகித்தின் மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மோகித்திற்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது ஆணுறுப்பு வலியை குணப்படுத்தி விட்டனர், ஆனால் இனி வாழ்நாள் முழுவதும் அவரது ஆணுறுப்பில் விரைப்புத்தன்மை குறையாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்நிலையில் விறைப்புத் தன்மையை மறைக்க இறுக்கமான துணியை உடுத்த வேண்டும் அல்லது இறுக்கமான உள்ளாடை அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் வாழ்க்கை முழுவதும் இந்த பிரச்சனையில் இருந்து மோகித் மீள முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தவறான நடவடிக்கையால் வினோத பிரச்சனையில் அகப்பட்டு  இளைஞர் தவித்து வருகிறார்.  

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!