சொத்துக்காக இப்படி கூடவா செய்வாங்க? அட கடவுளே.. அரக்கோணத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நீங்களே பாருங்க.!

Published : Jun 08, 2022, 03:22 PM IST
சொத்துக்காக இப்படி கூடவா செய்வாங்க? அட கடவுளே.. அரக்கோணத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நீங்களே பாருங்க.!

சுருக்கம்

அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார். வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் குளியலறையில் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அரக்கோணம் அருகே சொத்து தகராறால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை சொந்த அத்தையும், மகளும் சேர்ந்து பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த  தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ(22). இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சநந்தினி( 20).  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்சா நந்தினிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு குழந்தை யுவனுக்கு அம்சா நந்தினி பால் கொடுத்து விட்டு, குழந்தை மற்றும் மாமியார் கீதாவுடன் தரையில் படுத்து தூங்கியுள்ளார். 

அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார். வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் குளியலறையில் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குழந்தையின் தந்தைத மனோ அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில் குழந்தையின் தந்தை மனோவின் சகோதரி தேன்மொழி (52), மற்றும் அவரது மகள் பாரதி (30) ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் நடத்ததப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தேன்மொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை. மனோவின் தாய் கீதா கஷ்டப்பட்டு அந்த இடத்தில் சிறிய வீடுகட்டி மகனுடன் வசித்து வருகின்றார். தனது இளைய மகளை மனோ திருமணம் செய்யாமல் வேறு சமூக பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசும் பிறந்ததால் மேலும் ஆத்திரமடைந்த தேன்மொழி குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி