மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த 4 பேர்!! அரசு பள்ளிக்குள் புகுந்து கத்தியை காட்டி படம் பிடித்து அட்டூழியம்...

Published : Jun 10, 2019, 05:51 PM IST
மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த 4 பேர்!! அரசு பள்ளிக்குள் புகுந்து கத்தியை காட்டி படம் பிடித்து அட்டூழியம்...

சுருக்கம்

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் மொபைல் போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி அரசுப் பள்ளியில் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பள்ளிப்பாளையம்  பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இயங்கி வருகிறது கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 1500கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றுசுவர் இல்லாததால் கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பெற்றோர்களின் பல மாத குற்றச்சாட்டு.

இந்நிலையில், மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது முகமூடி அணிந்த 4 பேர் ஆபாச வீடியோ போட்டோ எடுத்துள்ளனர். இதைப் பார்த்த மாணவி கூச்சலிட்டதால் கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த மாணவி அங்கேயே மயக்கம்  போட்டு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து அருகே உள்ள சகமாணவிகள் ஆசிரியருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.  இந்த தகவல் கேட்டு கொதிப்படைந்த அந்த ஊர் பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளிக்கூடத்துக்கு சுற்றுசுவர் எழுப்புவதோடு கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக  உறுதி அளித்துள்ளனர். அப்போது சில மாணவிகள்  சில ஆசாமிகள் தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்