கதுவா சிறுமி சீரழித்து கொல்லப்பட்ட வழக்கு... 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!

By vinoth kumarFirst Published Jun 10, 2019, 5:41 PM IST
Highlights

தேசத்தை உலுக்கிய கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர்களில் முக்கிய குற்றவாளிகள் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டார். பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சிறுமி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில்  
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்தன. 

இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில் ஊர்தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள்  உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறுவன் என்பதால், அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் கிராம தலைவர் சன்ஜி ராம், போலீஸ் அதிகாரி தீபக் கஷூரியா, பர்வேஷ் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு அபராதத்துடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

click me!