கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி... பைக்கில் வந்து வழிமறித்து கற்பழிக்க முயன்ற வாலிபர்!! தர்மபுரியில் அருகே பரபரப்பு...

Published : Jul 25, 2019, 12:05 PM IST
கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி... பைக்கில் வந்து வழிமறித்து கற்பழிக்க முயன்ற வாலிபர்!! தர்மபுரியில் அருகே பரபரப்பு...

சுருக்கம்

கல்லூரிக்கு சென்று சைக்கிளில் வந்துகொண்டிருந்த மாணவியை வழிமறித்து கற்பழிக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார் தால். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து  போலீசில் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி வீட்டில் இருந்து சைக்கிளில் காரிமங்கலத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். சம்பவத் தன்று மாணவி கல்லூரி முடிந்து காரிமங்கலத்திற்கு பஸ்சில் வந்தார். பின் அவர் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று மொட்டலூர் ஏரிக்கரையில் சென்ற போது கும்பார அள்ளி அருகே உள்ள குள்ளன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவியை வழிமறித்து, பேசினார் அப்போது சிறிது நேரத்தில் கையைப் பிடித்து கற்பழிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறி கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, தாக்கினர், பின்னர் காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்