கள்ளக்காதலியின் கணவனை காரை ஏற்றி கொலை... மனைவி, மகனும் தற்கொலை!! உல்லாசத்துக்காக கள்ளக்காதல் ஜோடி வெறிச்செயல்!!

By sathish kFirst Published Jul 25, 2019, 11:34 AM IST
Highlights

தொழிலாளியை காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக  அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழிலாளியை காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக  அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள உக்கடை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி மணல்மேடு அருகே உள்ள நாராயணமங்கலம் மெயின் ரோடு பகுதியில் தலைநசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே அவர் ஓட்டிச்சென்ற மொபட்டும் கிடந்தது.

மேலும் சிறிது தூரத்தில் உள்ள புளிய மரத்தில் ஒரு கார் மோதிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து ராஜகோபாலின் உறவினர்  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பட்டவர்த்தியை சேர்ந்த ராஜேஷ், சிவ சிதம்பரம் என்பது தெரியவந்தது. இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், ராஜகோபால் சாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜகோபால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது; மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமீர்,  இவருக்கும் ராஜகோபால் மனைவி ஷீலாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. ராஜகோபால் வீட்டிற்கே சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு வந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் மனவுளைச்சலில் அமீர் மனைவி பரமேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

இதேபோல, அமீர்ன் மகனும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அமீர்ஹைதர்கான் - ஷீலா ஆகியோரின் கள்ளக்காதல் ஷீலாவின் கணவர் ராஜகோபாலுக்கும் தெரிந்துள்ளது. அமீர் சொத்துகளுக்கு ராஜகோபால் தான் பினாமியாக இருந்து வந்தார். சமீபகாலமாக ராஜகோபால், அமீர்  பேச்சுக்கு கட்டுப்படவில்லை. 

மேலும் ஷீலாவை, அமீரிடம் இருந்து பிரிக்க பிளான் போட்டுள்ளார். இதனால் கூலிப்படையினர் மூலம் அமீர், ராஜகோபால் மீது காரை ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சிவசிதம்பரம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அமீர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

click me!