“ ஏன் என்கிட்ட பேசமாட்ற” கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்..

By Ramya s  |  First Published Aug 23, 2023, 8:59 AM IST

கள்ளக்காதலி பேசவில்லை என்பதால், அவரை கள்ளக்காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், ரயில்நகர் பகுதியை சேர்ந்த சுந்தர். 26 வயதான அவர் தாரணி என்ற 21 வயதாகும் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கூலி வேலை பார்த்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோயில் மல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த சுதீன் என்பவரும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும் அடிக்கடி வெளியே மது அருந்துவதையும் பழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனிடையே சுதீன் அவ்வப்போது சுந்தரின் வீட்டிற்கு செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்போது சுந்தரின் மனைவி தாரணியுடன் சுதீனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. தாரணியும் சுதீனும் அவ்வப்போது தனியமை உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த சூழலில் தாரணியின் கணவர் சுந்தருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவர இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதையடுத்து சுதினுடன் பேசுவதை தாரணி நிறுத்தி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

 

பெற்ற தாயை மகன் கோடாரியால் வெட்டி படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

இதனால் ஆத்திரமடைந்த சுதீன், ஏன் என்னுடன் வழக்கம் போல் பேசுவது இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் ஆகியவற்றை கொண்டு தாரணியி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் தாரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு சென்ற சுதீன், கள்ளக்காதலியை கொலை செய்துள்ளதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதீனை கைது செய்து அவரிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தாரணியின் உடலை மீண்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலி பேசவில்லை என்பதால், அவரை கள்ளக்காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!