பெற்ற தாயை மகன் கோடாரியால் வெட்டி படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

By vinoth kumar  |  First Published Aug 22, 2023, 3:34 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் 35 வயது பெண் தனது 17 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். தாய் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 


பெற்ற தாயை 17 வயது மகன் கோடாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் 35 வயது பெண் தனது 17 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். தாய் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், மகனுக்கும், தயாராருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தாயாருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவனது தாயார், அவருடைய செல்போனில் இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மகன் அருகில் இருந்த கோடறியை அடுத்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பெற்ற தாயை மகன் கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!