எங்க கிட்டயே தகராறு பண்றியா.. இளைஞரை வெட்டி படுகொலை செய்த கஞ்சா கும்பல்.. சென்னையில் பயங்கரம்.!

Published : Aug 22, 2023, 01:01 PM ISTUpdated : Aug 22, 2023, 01:03 PM IST
எங்க கிட்டயே தகராறு பண்றியா..  இளைஞரை வெட்டி படுகொலை செய்த கஞ்சா கும்பல்.. சென்னையில் பயங்கரம்.!

சுருக்கம்

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (23). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் மது அருந்திவிட்டு மண்ணூர்பேட்டை பகுதியில் பிரியாணி வாங்க சென்றுள்ளனர். 

சென்னையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா கும்பல் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (23). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் மது அருந்திவிட்டு மண்ணூர்பேட்டை பகுதியில் பிரியாணி வாங்க சென்றுள்ளனர். அப்போது கடையின் வெளியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- பெத்த இதே கையால.. ரத்தத்தோட ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனேன்.. யாரும் உதவ முன் வரவில்லை.. தாய் கதறல்..!

அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த சிலருக்கும் பாலசந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. கஞ்சா போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்த கும்பல் பாலசந்தரை சரமாமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை அவரது நண்பர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;- கணவரை கழட்டி விட்டு 17 வயது சிறுவனை கரெக்ட் செய்த திருமணமான பெண்.. இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

உடனே இந்த சம்பவம் தொடர்பாக  அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலசந்தரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!