வெளிநாடு செல்லவிருந்த நண்பனை ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொன்ற வாலிபர்; குமரியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 8:42 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறு காரணமாக வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்த இளைஞர் ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை. கட்டுமான தொழிலாளி கைது.


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார்(வயது 22). இவர் தொழில்நுட்ப பயிற்சி முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது நண்பராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதில் இசக்கிமுத்துவை மனோஜ் குமார் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து பதிலுக்கு தனது கையில் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் மனோஜ் குமாரின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

காதலுக்கு இடையூறு; தந்தையை தீர்த்துக்கட்ட நகை, பணத்தை வழங்கிய 16 வயது சிறுமி காதலனுடன் கைது

இதனால் பலத்த காயமடைந்த மனோஜ் குமார் படுகாயங்களுடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலையை செய்து விட்டு சாத்தான்குளம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இசக்கி முத்துவை வடசேரி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு, கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!