மதுபோதையில் தாய்மாமனின் மகனை கல்லால் அடித்து கொன்ற நபர் கைது

By Velmurugan s  |  First Published Aug 29, 2023, 6:11 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மது போதையில் உறவினர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோபாலகிருஷ்ணன். திருமணம் ஆகாத நிலையில், ஓட்டுநராக வேலை செய்து கொண்டு ஜமீன் கோட்டாம் பட்டி ஆத்து மேடு பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரும், இவரது உறவினரான ரஞ்சித் குமாரும், அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ரஞ்சித் குமார் நேற்று இரவு மது வாங்கி கொண்டு கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சித் குமாரின்  அம்மாவை கோபாலகிருஷ்ணன் தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது, இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர்.  

Tap to resize

Latest Videos

undefined

15 வயது சிறுவனுடன் சில்மிஷம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

கோபாலகிருஷ்னன் வெளியில் வீட்டு மதில் சுவரில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் அடித்துள்ளார். இதில் ரஞ்சித் குமார் விழுந்ததும் அதே கல்லை எடுத்து முகத்தில் தாக்கியுள்ளார். இதில்  ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

கோபாலகிருஷ்ணன் அருகில் வசிக்கும் உத்தரராஜ்  தொலைபேசி மூலம் கோட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் வந்து பார்த்தபோது ரஞ்சித் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

தேனியில் மனைவி தூக்கிட்டுக்கொண்ட அதே கயிற்றில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை; கலங்கி நிற்கும் மகள்

சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!