நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(38). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நெல்லையில் தலை துண்டித்து ஓட்டுநர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(38). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தருவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கணேசனை வழிமறித்த கும்பல் கொலை செய்ய முயற்சித்தது. உடனே வண்டியை அங்கேயே போட்டுவிட்டு வயல்வெளிக்குள் ஓடிய கணேசனை அந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியதில் தலை துண்டானது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனே இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நாம ஒன்னு சேர முடியாது.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த பகீர்.!
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில் மாரியம்மாள்(56) வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணேசன் கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.