தேனியில் மனைவி தூக்கிட்டுக்கொண்ட அதே கயிற்றில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை; கலங்கி நிற்கும் மகள்

Published : Aug 29, 2023, 01:01 PM IST
தேனியில் மனைவி தூக்கிட்டுக்கொண்ட அதே கயிற்றில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை; கலங்கி நிற்கும் மகள்

சுருக்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர். இவர் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைப் பார்த்த கணவரும், தன்னால் தான் மனைவி தற்கொலை செய்து கொண்டாரோ என்ற குற்ற உணர்ச்சியில் மனைவி தூக்கிட்டு தொங்கிய அதே கயிற்றில் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடியில் வருங்கால மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்ட வாலிபர்; கச்சிதமாக முடித்த மனைவி, மகள்கள்

காலை இருவரும் இறந்து கிடப்பதை பார்த்த மகள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தகவல் கூறியதைத் தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!