புதுச்சேரியில் வீட்டருகே உள்ள கல்லூரி மாணவரின் பிரச்சினையை பேசி தீர்க்கச் சென்ற வாலிபரை அண்ணன், தம்பி சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி திலாசுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (வயது 27). இவர் மீது கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கல்லூரி மாணவரான வெற்றி. வெற்றிக்கும் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த சகோதர்களான அமீர்கான் (நடன கலைஞர்) மற்றும் ஷாருக்கானுக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கிஷோரை வெற்றி அமிர்கான் வீட்டிற்கு இரவு 7 மணியளவில் அழைத்து சென்றுள்ளார்.
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவன் பலி; சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
undefined
அப்போது அவர்கள் சமாதானம் பேசி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதில் கிஷோரின் தாயை சகோதரர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கிஷோர் அமிர்கானை தாக்கியுள்ளார். இதனை கண்ட அவரது தம்பியான ஷாருக்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து கிஷோரை சரமாரியாக வெட்டி உள்ளார். அப்போது அமிர்கானும் அருகே இருந்த இரும்பு கம்பியால் கிஷோரை தாக்கியதை அடுத்து அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சரிந்துள்ளார்.
இதனை அடுத்து சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெற்றி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கனகன் ஏரி அருகே பதுங்கி இருந்த சகோதர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.