ஸ்கூல் ரூமில் வைத்து கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! கிரீன் பேரடைஸ் பள்ளி முதல்வர் கைது!

By vinoth kumar  |  First Published Jan 18, 2024, 2:03 PM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் கிரீன் பேரடைஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். 


திண்டிவனம் அருகே கிரீன் பேரடைஸ் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் கிரீன் பேரடைஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொடூர கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

இந்நிலையில் இப்பள்ளியின்  முதல்வர் கார்த்திகேயன் தனது அறைக்கு அழைத்து சென்று 10ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;-  என் கூட பேசலனா.. நம்ம ஒண்ணா இருந்த போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. மரண வாக்குமூலம் கொடுத்த மாணவி!

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இதனையடுத்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை தேடிவந்த நிலையில் இன்று போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!